FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாட்டும் வெப்பம்: வட மாநிலங்களில் 87 பேர் உயிரிழப்பு!

தில்லியில் சென்சார் கோளாறால் 52.9 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Updated On : 1 ஜூன் 2024, 8:31 pm IST
பகிர்:

வட மாநிலங்களில் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஒடிஸாவில் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பிகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.

ஹரியாணா, சண்டீகர் - தில்லி, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், உத்தராகண்டின் சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, தில்லியின் முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலைய சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் அதிகபட்ச வெப்பநிலையை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மே 29 அன்று முங்கேஷ்பூரில் வானிலை மைய சென்சாரில் அதிகபட்ச வெப்பநிலையான 52.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதைத்தவிர மற்ற சென்சாரில் 45.2 முதல் 49.1 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்த வரைவு அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments