FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதமர் பதவியேற்பு விழா: இன்னும் அழைக்கவில்லை -காங். குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்பு விழா

8 ஜூன் 2024, 4:52 pm
- படம் | ஏஎன்ஐ
பகிர்:

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தில்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு, பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையின்படி, மாலத்தீவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தங்களுக்கு இன்னும் அழைக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுதில்லியில் சனிக்கிழமை(ஜூன் 8) செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, “பதவியேற்பு விழாவுக்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள்(இந்தியா) கூட்டணித் தலைவர்கள் இன்னும் அழைப்பிதழை பெறவில்லை.

இந்தியா கூட்டணித் தலைவர்கள் அழைப்பிதழ் பெறும்போது, நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்போம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.