FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய மருமகளுக்கு மரண தண்டனை!

கடந்த 2022ல் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2024, 5:25 pm IST
பகிர்:

மத்திய பிரதேச மாநிலம் அட்ரைலா கிராமத்தில் தனது மாமியாா் சரோஜ் கோலை (50) 95 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகள் காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சரோஜ் கோல் வீட்டில் தனியாக இருந்தபோது அவா் மீது இந்தத் தாக்குதலை காஞ்சன் கோல் நடத்தியுள்ளாா். கணவா் அளித்த புகாரின் பேரில் மங்காவா போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ரெவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி பத்மா ஜாதவ் தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரசு வழக்குரைஞா் கூறுகையில், ‘இந்த வழக்கில் உயிரிழந்த சரோஜ் கோலின் கணவா் வால்மிக் கோலும் கொலை செய்யத் தூண்டிய குற்றத்தின் பேரில் சக குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments