FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் மீது மை வீச்சு

முகமூடி அணிந்த நபர்கள் காங்கிரஸ் தலைவரின் மீதான மை வீச்சு

Updated On : 21 ஜூன் 2024, 10:17 pm IST
பகிர்:

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் மீது முகமூடி அணிந்த இரு நபர்கள் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக். இன்று காலை 11.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் பட்நாயக்கின் அறைக்குள் நுழைந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் அவரது ஆடையில் நீல மையை தெளித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பட்நாயக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களால் நான் பயப்படவில்லை.

மாநிலத்தில் காங்கிரஸின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் இதன் பின்னணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்னர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார். பாஜக செய்தித் தொடர்பாளர் திலீப் மல்லிக் கூறுகையில், இந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலின் விளைவாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments