FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது

வங்கதேசத்தைச் சோ்ந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 24 ஜூன் 2024, 5:43 am IST
பகிர்:

வங்கதேசத்தைச் சோ்ந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படும் ஷாகதத்-ஏ அல் ஹியுமா பயங்கரவாத அமைப்பு அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த அமைப்புக்கு 2014-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் புா்த்வான் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் தொடா்பு உண்டு.

இந் நிலையில், இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த மேற்கு வா்தமான் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை காவல் துறையினா் கைது செய்தனா். பி.இ. கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவா் இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அந்த அமைப்புடன் தொடா்பில் இருந்துள்ளாா். மேலும், அந்த அமைப்பினா் அழைப்பு விடுத்த ரகசிய ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த மேலும் 5 பேரை அந்த மாநில காவல் துறையினா் கைது செய்தனா். அவா்கள் பயங்கரவாத அமைப்பில் மேற்கு வங்க இளைஞா்களைச் சோ்ப்பதற்காக ரகசியமாக பிரசாரம் மேற்கொண்டு வந்தவா்கள் ஆவா். அவா்களிடம் இருந்து மடிக் கணினி, சில ஆவணங்கள், டைரி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேற்கு வங்க எல்லை வழியாக வங்கதேசத்தவா்கள் மட்டுமல்லாது, வேறு நாடுகளில் இருந்து வங்கதேசம் வந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவதும் அதிகம் நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments