இந்தியா

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக தொண்டர் கொல்லப்பட்டார்.

DIN

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜு ஜனதா தள ஆதரவாளர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு தேர்தல் பிரசாரத்திற்காக போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், வேட்பாளர் ஒருவரின் போஸ்டர்களை ஒட்டுவதில் மோதல் ஏற்பட்டதால் இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியுள்ளனர்.

இதில், காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

கல்லிகோட் சட்டப்பேரவை தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளரும், எம்எல்ஏவுமான சூர்யமணி பைத்யாவின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை பாஜகவினர் அடித்து உடைத்தனர். மேலும், எம்எல்ஏ சூர்யமணி பைத்யா மற்றும் அவரது கணவர் டெய்டரி பெஹராவை கைது செய்ய வேண்டும் என்று கூறி காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், எக்ஸ் தளத்தில் வெளியிடுள்ள பதிவில்,”கல்லிகோட் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான இந்த வன்முறை சம்பவம் ஆழ்ந்த கவலையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு நமது ஜனநாயகத்திலும், சமூகத்திலும் இடமில்லை.

அவரை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கா மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் கல்லிகோட்டிற்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT