கோப்பிலிருந்து 
இந்தியா

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யூனஸ் சௌத்ரியின் அந்தரங்க விடியோவால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யூனுஸ் சௌத்ரியின் அந்தரங்க விடியோவால் சர்ச்சை

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும், சாப்ராஸி பேரவைத் தொகுதி முன்னாள் வேட்பாளருமான யூனஸ் சவுத்ரியின் அந்தரங்க விடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு இளம் பெண் முன்னிலையில், மோசமாக நடந்து கொள்ளும் யுனஸ் சவுத்ரியின் அந்தரங்க விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு பக்கத்தினரும், எதிர்க்கட்சியினர் பலரும் யுனஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்களில் ஒருவர், இந்த விடியோவை இணைத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில், இருவரும் பேசிக் கொள்வதும் பதிவாகியிருக்கிறது. அப்பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுவதும், ஆனால், யுனஸ் தொடர்ந்து பெண்ணிடம் அத்துமீறுவதும் பதிவாகியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில், முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வரும் தலைவர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது, அப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக யுனஸ் சவுத்ரிக்கும் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் கருத்துகளை மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT