FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 46.25% வாக்குகள் பதிவு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்..

Updated On : 13 நவம்பர் 2024, 2:12 pm IST
பகிர்:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கும்லா மாவட்டத்தில் அதிகப்படியாக 52.11 சதவீதமாகவும், லோஹர்டாகா 51.53 சதவீதமாகவும், குந்தியல் 51.37, செரைகெல்லா-கர்சவானில் 50.71 ஆகவும், சிம்டேகா 50.66, லதேஹர் 50,41 ஆகவும், மிகக்குறைந்த அளவாக பலமு மாவட்டத்தில் 44 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

இன்று காலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments