FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோடி அரசியலில் விலகுவாரா? சித்தராமையா சவால்!

காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபித்தால், பிரதமர் அரசியலில் இருந்து விலக சித்தராமையா சவால்

Updated On : 17 நவம்பர் 2024, 2:31 pm IST
பிரதமர் மோடி - கர்நாடக முதல்வர் சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரதமர் அரசியலில் இருந்து விலக கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 16) சோலாப்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். மேலும், கர்நாடக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் பதவி விலகுவதாகவும் சவால் விடுத்தார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது, ``பிரதமர் மோடி அப்பட்டமான பொய்களைத்தான் பேசுகிறார். காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். ஆனால், நான் சொல்வது சரிதான் என்றால், அவர்கள் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்து விலகுவார்களா? எனது சவாலை மோடி ஏன் ஏற்கவில்லை? அவருக்கு என்ன பயம்?

Advertisement

Advertisement

விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யாத பாஜக, தொழிலதிபர்களுக்கான ரூ. 16 லட்சம் கோடி கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.

ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி மத்திய வரியாக செலுத்தினாலும், அதற்கு ஈடாக ரூ. 60,000 கோடி மட்டுமே கர்நாடகத்திற்கு வருகிறது; மகாராஷ்டிரத்திற்கும் ரூ. 8.78 லட்சம் கோடிக்கு ஈடாக ரூ. 1.3 லட்சம் கோடி மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது.

அதாவது, வரி செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கர்நாடகத்திற்கு 13 பைசாவும், மகாராஷ்டிரத்திற்கு 15 பைசாவும் மட்டுமே கிடைக்கிறது. இது கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் பாஜக இழைக்கும் அப்பட்டமான அநீதி’’ என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நவ. 14 ஆம் தேதியில் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, கர்நாடக மக்களை ஏமாற்றி ஆட்சியமைக்கும் காங்கிரஸ், மாநில மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தை மகாராஷ்டிர தேர்தலுக்காக செலவழிக்கின்றனர். கர்நாடகத்தில் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் மோசடிகளின் மூலம், மக்களிடம் காங்கிரஸ் கொள்ளையடிப்பது தெளிவாகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments