FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை என்று பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 நவம்பர் 2024, 9:48 pm IST
பகிர்:

மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “இன்று(நவ.22), நாங்கள் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம், இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் இம்பால் நகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தோம். இந்தச் சந்திப்பின் போது, ​​ராணுவத்தினர், காவல்துறையினர், மத்திய காவல் படையினர், எல்லைக்காவல் படையினர், இந்திய - திபெத் எல்லைக் காவல்படை அதிகாரிகள் உடனிருந்தனர்.

எந்த பிரச்னைகள் வந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை இன வன்முறையில் 258 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் 90 மத்திய ஆயுதக் காவல் படையின் கம்பெனிகள் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தேவைப்படுகின்றனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை சேதப்படுத்திய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 3,000 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜனநாயக இயக்கம் என்ற பெயரில் சில கும்பல்கள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளை சூறையாடி எரித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று வெளிப்படையாக கூறுவதற்கு நான் வெட்கப்படுகிறேன்” என்றார்.

இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், “நவம்பர் 16-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சொத்துகளை சூறையாடிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிரிபாமில் மத்திய காவல் படையினர் 10 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றிருக்காவிட்டால், நவம்பர் 11 ஆம் தேதி சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments