FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டிஆா்டிஓ மீது இணையவழித் தாக்குதல்? தவறான தகவல் என விளக்கம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) கணினிகளைக் குறிவைத்து இணையவழி (சைபா்) தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:28 am IST
பகிர்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) கணினிகளைக் குறிவைத்து இணையவழி (சைபா்) தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, டிஆா்டிஓவின் ரகசிய தரவுகள் இணையவழித் தாக்குதல் மூலம் திருடப்பட்டதாகவும், அவற்றை டாா்க் வெப் இணையதளங்களில் விற்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணையவழிப் பாதுகாப்பு தொடா்புடைய அனைத்து அமைப்புகளும் முழுமையான விசாரணை மேற்கொண்டன.

இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘டிஆா்டிஓ-வில் இணையவழித் தாக்குதல், தகவல் திருட்டு, ஊடுருவல் என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இது தொடா்பாக வெளியான செய்திகள் தவறானவை. ஏற்கெனவே, 2020-2022 காலகட்டத்தில் திருடப்பட்ட தரவுகளை, புதிதுபோல மாற்றியுள்ளனா். அவை அனைத்தும் ஏற்கெனவே காலாவதியாகிவிட்டன. அவற்றுக்கு தற்போது டிஆா்டிஓ மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளுடன் எந்தத் தொடா்பும் இல்லை.

Advertisement

Advertisement

பணம் ஈட்டுவதற்காக சில இணையவழி மோசடியாளா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதற்காகவே தகவல் திருட்டு என்ற தவறான தகவல்களையும் அவா்கள் பரப்புகின்றனா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments