முகப்பு
இந்தியா

ஆளுநர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டுகள்!

மணிப்பூரில் ஆளுநர் மாளிகை அருகே கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Updated On : 28 அக்டோபர் 2024, 10:30 am IST
கையெறி குண்டு (கோப்புப் படம்)
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலுள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்லூரி மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் இருந்து100 மீட்டர் தொலைவிலும், முதல்வரின் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கையெறி குண்டுகள் குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்தப் பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments