FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜிநாமா செய்யத் தயார்: மமதா பானர்ஜி

மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் மமதா பானர்ஜி பேச்சு

12 செப்டம்பர் 2024, 8:03 pm IST
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:

கொல்கத்தா மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததாகத் தெரிகிறது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவர்களுடன் அரசின் 32 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தை திறந்த வெளியில் நடத்த இன்று திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, ``மருத்துவர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருந்தோம், அவர்கள் வருவார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் இரண்டு மணி நேரமாக வரவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்பதால், அதனை நேரடி ஒளிப்பரப்பாகக் காட்ட முடியாது’’ என்று தெரிவித்தார்.

மேலும், இளம் மருத்துவர்களின் பணி நிறுத்தத்தால், 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், போராட்டம் செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது; இன்று ஆர்.ஜி. கர் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டும். மக்களுக்காக, நான் ராஜிநாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments