FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமர் சிலை பிரதிஷ்டைக்காக 11 நாள் சிறப்பு பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கும் பிரதமர்!

ராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு பிரார்த்தனை  பயிற்சியைக் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார்.

Updated On : 12 ஜனவரி 2024, 12:29 pm IST
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பகிர்:

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை - கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு பிரார்த்தனை பயிற்சியைக் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு பிரார்த்தனை பயிற்சியைக் கடைபிடிக்க தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இன்னும் 11 நாள்களே உள்ளன. 

இந்த மங்களகரமான நிகழ்விற்கு நானும் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம். ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வின்போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக  என்னைக் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார். 

இதனை மனதில் வைத்து இந்த 11 நாட்களுக்கு சிறப்பு பிரார்த்தனை பயிற்சியை மேற்கொள்ள உள்ளேன். இந்த தருணத்தில் எனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments