முகப்பு
இந்தியா

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
கோப்புப்படம்
பகிர்:

அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிகோபார் தீவுகளில் இன்று மாலை 6.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) கூறியுள்ளது.

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை 6.18 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் 21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.3-ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலையில் இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஆகும். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →