அயோத்தி ராமர் கோயில் கோப்புப் படம்
இந்தியா

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

உ.பி. அயோத்தி ராமர் கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் இ-மெயில் முகவரிக்கு ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கவிருப்பதாக நேற்று (ஏப். 14) இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைபர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அயோத்தி, பாரபங்கி மற்றும் அருகாமையிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து கோவிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பப்பட்டுள்ள இ-மெயில் பற்றி தீவிரமாக விசாரணை நடத்திவரும் பாதுகாப்பு அமைப்புகள் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் கடந்த 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 13.5 கோடி சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

SCROLL FOR NEXT