தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!
ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 26.41% உயர்வு...
மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால் சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில், இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 1 லட்சம் என்ற அளவை கடந்து விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை(ஏப். 22) காலை நிலவரப்படி, 10 கிராம் தங்கம் சில்லறை சந்தைகளில் ரூ. 1,02,794-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் எனப்படும் 99.99% பரிசுத்தமான தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,800-க்கும், (22 கேரட்)99.5% பரிசுத்த தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,300-க்கும் விற்பனையாகிறது என்று இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ‘அனைத்து இந்திய சரஃபா சங்கம்’ தெரிவித்துள்ளது.
இதனுடன், தங்கத்துக்கான 3% ஜிஎஸ்டி-யையும் சேர்த்தால் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் மொத்த விலை ரூ. 1,02,794-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கத்தின் மொத்த விலை 10 கிராம் ரூ. 1,02,279-க்கு விற்பனையாகிறது.
இந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 26.41% உயர்ந்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விலை மேலும் அதிகரிக்கும்!

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.