முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்...

Updated On : 22 ஏப்ரல் 2025, 8:59 pm IST
மு.க. ஸ்டாலின்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

’’ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய தமிழகம் சார்பில் தில்லியில் உள்ள ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியிலுள்ள சுற்றுலா தளத்திற்கு பயணிகள் இன்று (ஏப். 22) வழக்கம்போல் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக முகத்தை மறைத்துக்கொண்டிருந்த நபர்கள், பயணிகளை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உடன் அமித் ஷா புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிக்க | குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments