முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது பற்றி...

Updated On : 24 ஏப்ரல் 2025, 10:40 am IST
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு
பகிர்:

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments