குஜராத்தில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு!
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...
குஜராத்தில், 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின், கத்சிஷா பகுதியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இன்று (டிச. 13) மதியம் 2.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, காந்திநகரில் உள்ள நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, டிசம்பர் மாதத்தில் ஏற்படும் 3 ரிக்டர் அளவுகளிலான 5 ஆவது நிலநடுக்கம் ஆகும்.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, குஜராத்தின் கட்ச் மாவட்டம் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பகுதியாகக் கருதப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 13,000-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜன.6-ல் கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு?
A 3.9 magnitude earthquake has reportedly occurred in Gujarat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.