முகப்பு
இந்தியா

கும்பமேளாவில் புனித நீராடிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்!

மகா கும்பமேளாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

Updated On : 24 பிப்ரவரி 2025, 2:58 pm IST
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புனித நீராடினார்.
பகிர்:

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்தும் ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் முக்கிய தலைவர்கள் பலரும் நீராடி வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தனது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும் திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments