FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி விஸ்வ நாத் சர்மா காலமானார்!

முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி விஸ்வ நாத் சர்மா காலமானார்...

Updated On : 31 ஜூலை 2026, 5:39 pm IST
ஜெனரல் விஸ்வ நாத் சர்மா.. - எக்ஸ்/இந்திய ராணுவம்
பகிர்:

முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். விஸ்வ நாத் சர்மா காலமானார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல். விஸ்வ நாத் சர்மா (வயது 96) வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலை காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில், லாகூர் பிரிவுக்குத் தலைமை வகித்த விஸ்வ நாத் சர்மா அந்தப் போரில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவராக அறியப்படுகிறார்.

Advertisement

Advertisement

பயங்கரவாதம் மற்றும் பிரிவிணைவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஏராளமான திட்டங்களுக்குத் தலைமை வகித்த விஸ்வ நாத் சர்மா கடந்த 1988 ஆம் ஆண்டு ராணுவத் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

இதையடுத்து, 1990 ஆம் ஆண்டு வரை ராணுவத் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ஜெனரல். சர்மாவுக்கு, ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் விசிஷ்ட சேவா விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெனரல். விஸ்வ நாத் சர்மாவின் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ஜெனரல். விஸ்வ நாத் சர்மா, கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவரும், பரம் வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டவருமான மேஜர் சோம்நாத் சர்மாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Former Chief of Army Staff General Vishwa Nath Sharma has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments