ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் நாளை நேபாளம் பயணம்
இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக நாளை(ஆக 17) நேபாளம் செல்வது குறித்து...
இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக நாளை(ஆக 17) நேபாளம் செல்கிறார்.
இந்தியா மற்றும் நேபாளத்துக்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும், ராணுவ ரீதியான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதே தீரஜ் சேத் பயணத்தின் நோக்கமாகும்.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை:
Advertisement
Advertisement
இந்தியா மற்றும் நேபாளத்துக்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும், ராணுவ ரீதியான உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கமாக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத் நாளை நேபாளம் செல்கிறார்.
நேபாளம் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத், துண்டிகேலில் உள்ள ராணுவ அரங்கில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அத்துடன் நேபாள ராணுவத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து நேபாள ராணுவத்தின் தலைமைத் தளபதியுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேபாள அதிபர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். அங்கு, இந்திய - நேபாள ராணுவங்களுக்கு இடையேயான தனித்துவமான பாரம்பரியத்திற்கு இணங்க, நேபாள அதிபர் ராமச்சந்திர பௌடெல், அவருக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்குகிறார்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி ராணுவத் தலைமைத் தளபதி சிவபுரியில் உள்ள ராணுவக் கட்டளை, பணியாளர் பயிற்சிப் பிரிவின் பயற்சி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார்.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி பொக்காராவில் நடைபெறும் முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் கலந்துகொள்கிறார்.
General Dhiraj Seth, Chief of the Army Staff (COAS), departed on an official visit to Nepal from 17 to 19 August 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.