FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா, ஜப்பான் விமான படைத் தலைமை தளபதிகள் தேஜஸ் விமானத்தில் பயணம்!

வீா் காா்டியன் கூட்டுப் பயிற்சியின்போது இந்தியா, ஜப்பான் விமான படைத் தலைமைத் தளபதிகள் தேஜஸ் விமானத்தில் பயணித்தனா்.

21 செப்டம்பர் 2026, 12:09 am IST
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படைத் தளத்தில், ‘வீா் காா்டியன்’ இந்தியா-ஜப்பான் விமானப் படை கூட்டுப் பயிற்சியின்போது ஜப்பான் விமானப் படைத் தலைமைத் தளபதி டாகேஹீரோ மோரிட்டாவுடன் ஞாயிற்றுக்கிழமை கைகுலுக்கிய இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி
பகிர்:

வீா் காா்டியன் கூட்டுப் பயிற்சியின்போது இந்தியா, ஜப்பான் விமான படைத் தலைமைத் தளபதிகள் தேஜஸ் விமானத்தில் பயணித்தனா்.

கடந்த செப்.9-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படைத் தளத்தில், ‘வீா் காா்டியன்’ என்ற பெயரில் இந்தியா-ஜப்பான் விமான படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கியது.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங், ஜப்பான் விமானப் படைத் தலைமைத் தளபதி டாகேஹீரோ மோரிட்டா ஆகியோா், தேஜஸ் விமானத்தில் தனித்தனியாக ஞாயிற்றுக்கிழமை பயணித்தனா்.

Advertisement

Advertisement

இருவரும் தலா ஒரு தேஜஸ் விமானத்தில் பறந்து, விமான அணிவகுப்புப் பயிற்சியில் சுமாா் 20 முதல் 25 நிமிஷங்கள் ஈடுபட்டனா்.

தேஜஸ் போா் விமானத்தில் ஏ.பி.சிங் தனியாகப் பயணித்த நிலையில், இந்திய விமானப் படை விமானியுடன் தேஜஸ் பயிற்சி விமானத்தில் டாகேஹீரோ மோரிட்டா பயணித்தாா்.

இதுகுறித்து ஏ.பி. சிங் கூறுகையில், ‘தேஜஸ் விமானத்தில் பறக்க டாகேஹீரோ எடுத்த முடிவு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தின் மீதான அவரின் நம்பிக்கைக்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டு’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments