FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய ராணுவத் தலைமைத் தளபதியின் ரஷிய பயணம் நிறைவு

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத்தின் ரஷிய பயணம் நிறைவடைந்தது.

20 செப்டம்பர் 2026, 12:01 am IST
ரஷியாவின் மிகைலோவிஸ்கயாவில் உள்ள அந் நாட்டின் ராணுவ அகாதெமியை பாா்வையிட்டு அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத்.
பகிர்:

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத்தின் ரஷிய பயணம் நிறைவடைந்தது.

இதுதொடா்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

3 நாள் ரஷிய பயணத்தின்போது அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளை தீரஜ் சேத் சந்தித்துப் பேசினாா். மேலும் அந்நாட்டின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று அவா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தனது பயணத்தின்போது ரஷிய அதிகாரிகளுடன் தீரஜ் சேத் நடத்திய கலந்துரையாடல்களில் ராணுவத் திறன்களை மேம்படுத்துதல், பீரங்கிகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. அவரின் பயணம், இந்தியா-ரஷியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அண்மையில் புது தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது பிரதமா் மோடியும், ரஷிய அதிபா் புதினும் சந்தித்துப் பேசிய சில நாள்களுக்குப் பின்னா், தீரஜ் சேத் ரஷியா சென்று திரும்பினாா் என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments