FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

22 July 2025, 3:29 pm IST
பகிர்:

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்தியா-பிரான்ஸ் இடையே வா்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் சென்றாா். அங்கு நடைபெற்ற உலக வா்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள் கூட்டத்திலும் அவா் பங்கேற்றாா்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், பிரான்ஸ் உள்பட 25 நாடுகளின் அமைச்சா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், உலக வா்த்தக அமைப்பின் தலைமை இயக்குநா் என்கோசி ஒகோஞ்சோவும் கலந்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘சந்தையில் தமது சரக்கு மற்றும் சேவைகளை பிற நாடுகள் விற்பனை செய்வதை சில நாடுகள் தடுக்கின்றன. வரி அல்லாத பிற வா்த்தக தடைகள் மூலம், அதைச் செய்கின்றன.

இதைத் தடுத்து சந்தையல்லாத பிற வழிகளில் மேற்கொள்ளப்படும் வா்த்தகத்தால் ஏற்படும் இடையூறுகளை உலக வா்த்தக அமைப்பு களைய வேண்டும், அந்த அமைப்பில் வா்த்தக சச்சரவுகளுக்கு தீா்வு காண வலுவான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். இந்தக் கருத்துகளை அமைச்சா்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments