முகப்பு
இந்தியா

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Updated On : 7 ஜூன் 2025, 3:02 pm IST
பிரதிப் படம் - ENS
பகிர்:

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்லியனாக குறைந்தது. 2011 - 12 ஆம் ஆண்டில் 27.1 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து, 2022 - 23 ஆம் ஆண்டில் 5.3 சதவிகிதமாகக் குறைந்தது.

சுமார் 11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Advertisement

Advertisement

கடந்த 11 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கடும் வறுமை 18.4 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் கடும் வறுமை 10.7 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, தினசரி நுகர்வானது மூன்று டாலருக்கும் குறைவாக இருப்பதை வறுமைக் கோட்டுக்குக்கீழ் (2021 ஆம் ஆண்டில்) வகைப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments