FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்!

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:30 pm IST
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்
பகிர்:

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியாவின் சிறுபான்மை சமூகங்கள் சார்பில் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 9,550-க்கும் மேற்பட்ட புகார்களை தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில், 5 ஆண்டுகளில் அதிகளவு புகார்களை முஸ்லிம்கள் பதிவு செய்துள்ளனர். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் நாடு முழுவதுமிருந்து அளிக்கப்பட்ட மொத்தம் 9,557 புகார்களில், 2,059 புகார்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பானதும், 1,031 புகார்கள் நிலத்தகராறுகள் தொடர்பானதுமாக இருந்தன.

ஆச்சரியமளிக்கும் விதமாக, வகுப்புவாத வன்முறை தொடர்பாக 31 புகார்களும், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக 97 புகார்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பகிரப்பட்ட, சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6,145 புகார்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, சீக்கியர்கள் 1,222 புகார்களும் கிறிஸ்தவர்கள் 644 புகார்களும் பதிவு செய்துள்ளனர்.

இதில் கல்வி, சட்ட ஒழுங்கு, நில விவகாரம், மத உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் பல விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

மொத்த மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அதிகபட்சமாக 3,484 புகார்கள் உத்தரப் பிரதேச மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் தில்லியில் 1,140, மகாராஷ்டிரத்தில் 690, பஞ்சாபில் 512, தெலங்கானவில் 392, மத்தியப் பிரதேசத்தில் 381, ஹரியானாவில் 324 மற்றும் பிகாரில் 301 புகார்களும் பெறப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்துள்ளன.

”சிறுபான்மையினர் ஆணையம் அனைத்துக் குறைகளையும் முடிந்தவரை விரைவாகத் தீர்த்து வைத்துள்ளது" என்று ஓர் உறுப்பினரின் கேள்விக்குப் அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆண்டுவாரியான விவரங்களை வழங்கிய அமைச்சகம், இந்தியாவின் சிறுபான்மை சமூகங்களிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 2,076 புகார்களும், 2022-23 ஆம் ஆண்டில் 2,423 புகார்களும், 2023-24 ஆம் ஆண்டில் 1,999 புகார்களும், 2024-25 ஆம் ஆண்டில் 1,390 புகார்களும், 2025-26 ஆம் ஆண்டில் 1,699 புகார்களும் பெறப்பட்டதாகத் தெரிவித்தது.

2025-26 ஆம் ஆண்டிம் மட்டும் முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து அதிகபட்சமாக 577 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இது 2021-22 இல் 378, 2022-23 இல் 303, 2023-24 இல் 386, 2024-25 இல் 415 ஆக இருந்தது குறிப்பிடத்தகது.

மத்திய அரசு, தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992-ம் கீழ் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை நிறுவியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் உறுதிசெய்யப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்க தேசிய சிறுபான்மை ஆணையம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில், இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் மட்டுமே சிறுபான்மையினராக வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 27 ஜனவரி 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் கீழ் ஜைனர்களும் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டனர்.

சிறுபான்மையினர் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, பாதிப்புகளுக்கு ஆளாகும் சிறுபான்மையினர் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அந்தந்த மாநிலங்களில் உள்ள தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை அணுகவேண்டும்.

மேலும், தங்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ வழிமுறைகளையும் முழுமையாகப் மேற்கொண்ட பிறகும் கூட, அவர்கள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் தங்களது முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம்.

summary

National Commission for Minorities received 9,000 complaints in 5 years!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments