பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 9.1 சதவீதம் அதிகமாகும்.
அரசுத் தரவுகளின்படி, பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,83,646 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.35,204 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,704 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.90,870 கோடி, இழப்பீட்டு வரி ரூ.13,868 கோடி.
உள்நாட்டு வருவாய் மூலம் ரூ.1.42 லட்சம் கோடியும், இறக்குமதி வருவாய் மூலம் ரூ.42,702 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 10.2 சதவீதம், 5.4 சதவீதம் அதிகரிப்பாகும்.
Advertisement
Advertisement
பிப்ரவரியில் திருப்பி அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.20,889 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 17.3 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாகும்.
கடந்த ஜனவரியில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி. இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைக்கப் பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும். அதேநேரம், பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானதே இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.