FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹரியாணா: விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி தப்பினாா்

ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவாா் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

Updated On : 8 மார்ச் 2025, 2:10 am IST
பகிர்:

ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவாா் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த விமானி இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி உயிா் தப்பினாா்.

இது தொடா்பாக விமானப்படை, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தைச் சோ்ந்த ஜாகுவாா் விமானத்தில் விமானி ஒருவா் வெள்ளிக்கிழமை காலை வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். மோா்னி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. முன்னதாக, இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பு மூலம் விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து பத்திரமாக தரை இறங்கினாா். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விமானம் மலைப் பாங்கான இடத்தில் விழுந்ததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. விமான விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமானப்படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்-32 விமானம் விபத்து: ஹரியாணைவைப்போல மேற்கு வங்கத்தில் உள்ள பாக்தோக்ரா பகுதியில் தரையிறங்கியபோது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. அதிருஷ்டவசமாக விமானத்தில் பயணித்தவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments