FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.

Updated On : 10 மார்ச் 2025, 11:06 am IST
விபத்து(கோப்புப்படம்)
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.

சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி திவாரி தெரிவித்தார்.

சிதியிலிருந்து பஹ்ரி நோக்கி லாரியும், ஒரு குடும்ப உறுப்பினர்களுடன் மைஹார் நோக்கிச் சென்ற வாகனமும்( SUV டாக்ஸி சேவை) நேருக்கு நேர் மோதியதாக அவர் கூறினார்.

Advertisement

Advertisement

அதில் வாகனத்தில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரி கூறினார். காயமடைந்த 14 பேரில், ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக ரேவாவுக்கு அனுப்பப்பட்டனர்.

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

அங்கு பலத்த காயமடைந்தவர்களில் ஒருவர் பலியானதாக சிதி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா தெரிவித்தார்.

மற்றவர்கள் சிதி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக திவாரி கூறினார். வாகனம் தவறான திசையில் வந்ததே விபத்திற்கான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தையின் மொட்டை எடுக்கும் நிகழ்ச்சிக்காக சென்றபோது வாகனம் விபத்தில் சிக்கியிருப்பது தெரிவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments