முகப்பு
இந்தியா

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தகவல்.

Updated On : 26 மார்ச் 2025, 7:08 pm IST
பகிர்:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015 ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024 - 25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன.

மேலும், இதே வளர்ச்சியுடன் முன்னேறினால், 2027 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 டிரில்லியன் டாலர் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 105 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தாலும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 76 சதவிகிதமாகவும், அமெரிக்கா 66 சதவிகிதமும், ஜெர்மனி 44 சதவிகிதமும், பிரான்ஸ் 38 சதவிகிதமும், இங்கிலாந்து 28 சதவிகிதம் மட்டுமே வளர்ந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா 30.3 டிரில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், சீனா 19.5 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளன. தற்போதைய வேகத்தில் ஒவ்வோர் ஒன்றரை வருடங்களுக்கும் இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலர்களை சேர்க்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வேகம் தொடர்ந்தால், 2032 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாடு 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். மேலும், இந்தியாவின் தற்போதைய வேகம் தொடர்ந்து முன்னேறினால், உலகின் முதல் 2 பொருளாதாரங்களும் வெகுதொலைவில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.