FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!

சத்தீஸ்கரில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலியாகியுள்ளது.

Updated On : 15 மே 2025, 3:06 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் அமைந்துள்ள கொர்கோட்டாலு மலைப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் 21 நாள் தொடர் நடவடிக்கைகள் கடந்த மே 11 ஆம் தேதியன்று நிறைவடைந்தன.

அம்மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில் சுமார் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த ஏப்.27 ஆம் தேதியன்று, அங்குள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதில், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்குச் சொந்தமான ரோலோ எனும் 2 வயதுடைய பெல்ஜியன் ஷெப்பர்டு வகை மோப்ப நாயையும் தேனீக்கள் கொட்டியுள்ளன.

உடனடியாக, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் ரோலோவின் மீது பாலிதீன் போர்வையால் மூடி அதைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால், அதனுள் புகுந்த தேனீக்கள் தொடர்ந்து தாக்கியதில் ரோலோ அந்தப் போர்வையை விட்டு வெளியே ஓடியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட தேனீக்கள் தாக்கியதில் ரோலோ அங்கேயே மயங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரோலோவை மீட்ட பாதுகாப்புப் படையினர், கால்நடை மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோலோ ஏற்கனவே பலியாகியதாகக் கூறியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முறையானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெடிகுண்டுகளைக் கண்டறிய ரோலோ மத்திய ரிசர்வ் காவல் படையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், பணியின்போது பலியான ரோலோவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் உயர் அதிகாரி தற்போது பாராட்டுப் பதக்கத்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 21 நாள் தாக்குதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரின் தரப்பில் ‘ரோலோ’ எனும் மோப்ப நாய் மட்டும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments