முகப்பு
இந்தியா

துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!

துருக்கி பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ஐஐடி மும்பை தெரிவித்துள்ளது.

Updated On : 18 மே, 2025 at 12:13 PM
ஐஐடி மும்பை - கோப்புப் படம்
பகிர்:

துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதில், மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டங்கள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் ரத்து செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் ராணுவ மோதலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து கூறியதால், அந்நாட்டுடனான உறவை மத்திய அரசு படிப்படியாகத் துண்டித்து வருகிறது.

Advertisement

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தலத்திலுள்ள பைசாரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் பலரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் அந்நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுலாப் பயணங்களையும் ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்தனர்.

இந்நிலையில், துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான கல்வி சார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக் கழகம் (ஐஐடி) அறிவித்துள்ளது.

தற்போது, துருக்கியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஐஐடி மும்பை கொண்டுள்ளது. தற்போது இந்தத் திட்டமும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இதில் எந்தவித முன்னேற்றமும் இனி ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி மும்பையைப் போன்றே, ரூக்ரி (உத்தரகண்ட்) ஐஐடியும் இதேபோன்று துருக்கி உடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments