FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவுடன் வா்த்தக உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா்

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

Updated On : 26 செப்டம்பர் 2025, 12:14 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நியூயாா்க் வெளிநாட்டு பத்திரிகை மையத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தது தொடா்பாக கிறிஸ் ரைட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் வேகமாக வளா்ந்து வரும் பொருளதாரமுமான இந்தியா அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக உள்ளது.

இந்தியாவில் வளமை மற்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு எரிசக்திக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைன் போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்த உதவி வருகின்றன. இதுவே இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட காரணம்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை இந்தியா்களும் கொண்டுள்ளனா் என நம்புகிறேன். அதனடிப்படையில் இயற்கை எரிவாயு, நிலக்கரி, அணுசக்தி என இந்தியாவுடான எரிசக்தி உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்.

குறைந்த விலையில் விற்பனை செய்வதால் ரஷியாவிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலகளவில் பல நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ரஷியாவுக்கு மாற்றாக அந்நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம். அமெரிக்காவிடமிருந்தும் இறக்குமதி செய்யலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments