மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி
மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பஞ்சாபைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பிருந்தாவனத்தில் உள்ள யமுனையில் வெள்ளிக்கிழமை மதியம் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
படகு ஆழமான நீரினுள் சென்றுகொண்டிருந்தபோது, மிதக்கும் படகுத்துறையின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர். இதுவரை 16 முதல் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் மிதவைப் பாலம் ஒன்று சமீபத்தில் அகற்றப்பட்டுள்ளது. அதனால் சில மிதவைப் பால உருளைகள் ஆற்றில் மிதந்துள்ளன.
அதன் ஒன்றின் மீதுதான் படகு மோதியிருக்கலாம் என்று குறிப்பிட்டனர்.
A boat carrying tourists, primarily from Punjab, capsized in Yamuna in Vrindavan on Friday afternoon, leaving at least 10 people dead and several others missing, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.