ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது
ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்ததோடு பிகாரைச் சேர்ந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்ததோடு பிகாரைச் சேர்ந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் காரின் பாதுகாப்புடன் பிக்கப் வேன் மூலம் பிகாருக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சட்டர்பூர்-ஜப்லா பிரதான சாலையில் உள்ள ஒயின் கடைக்கு அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
அப்போது வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து 840 லிட்டர் கள்ளச்சாராயம் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், பிக்கப் வேனுக்குப் பாதுகாப்பு அளித்த கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் பிகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையின் போது, கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக சாராயத்தைக் கொண்டு சென்றதாக அவர்கள் கூறியதாக சட்டர்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவத் குமார் யாதவ் தெரிவித்தார்.
பிகார் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. சட்டம் அமலில் இருக்கும் போதும் அங்கு கள்ளச்சாராயம் விற்பனையும் அதுதொடர்பான மரணங்களும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The police seized 840 litres of illegal spirit during a raid in Jharkhand's Palamu district and arrested six men from Bihar on the charge of trying to transport the liquor to the neighbouring state, where consumption of liquor is banned, an officer said on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.