லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்
லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'லிவ்-இன்' உறவில் இருப்பவருக்கு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு பொருந்தாது என்று கூறி, தன் மீது 498A பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஒருவர் வைத்த கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோங்மெய்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு அதனை விசாரித்தது.
Advertisement
Advertisement
அதில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கம் நிரூபிக்கப்பட்டு 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு கண்டிப்பாகப் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர்.
இதன் பொருள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-இன் கீழ், அதன் வரம்பு லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தால் அதற்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பதைப் போன்றே, திருமண உறவைப் போன்ற லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு அத்தகைய பாதுகாப்பு கிடைக்காமல் போவது அரசியலமைப்புக்கு முரணானது. அது அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
"கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினரால் மனரீதியான, உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது அப்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே சட்டப்பிரிவு 498A-வின் நோக்கமாகும். இந்த நிலையில், அதுபோன்ற துன்புறுத்தல்கள் திருமணத்திற்குப் பின் மட்டுமே நிகழும், அதற்கு முன் நிகழாது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் என்பதே எங்களின் கருத்து.
சட்டப் பிரிவு 498A-வின் கீழ், திருமணமான தம்பதிக்கும் லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு இடையே காட்டப்படும் வேறுபாடு, குடும்ப வன்முறையைத் தடுக்கும் நோக்கத்துடன் நியாயமான தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இது இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவுக்கு முரணாகவுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Domestic Violence Prevention Act applies to those in live-in relationships: Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.