ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் கலந்துரையாடல்!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 'ஜென் ஸீ’ மற்றும் 'ஜென் ஆல்ஃபா' தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் ஆகஸ்ட் 6 அன்று 'ஜென் ஸீ’ மற்றும் 'ஜென் ஆல்ஃபா' தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் இயக்கத்தின் 15-வது ஆண்டு விழாவில் இந்தக் கலந்துரையாடல் நிகழவுள்ளது. இந்தியா முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 15 முதல் 19 வயதுக்குள்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். பதின் வயதினர் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இது நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு பற்றி அந்த இயக்கத்தின் நிறுவனர் ரிஷப் ஷா பேசுகையில், ”தலைமைப் பண்பு என்பது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது மட்டுமல்ல. அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பதும் ஆகும்.
Advertisement
Advertisement
இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், இதுபோன்ற உரையாடல் முன்பைவிட அதிகமாக இப்போது தேவைப்படுகிறது. எங்கள் அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் உரையாற்ற வரும் மோகன் பகவத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் விவாதித்து ஆலோசிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும், இந்த இயக்கம் 108 மாநாடுகளையும், ஆயிரக்கணக்கான சமூக நலன் சார்ந்த முன்னெடுப்புகளையும் செய்கிறது.
அனைத்தும், 15 முதல் 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களால் 11 முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்காக கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இதில், பங்கேற்ற பலரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் மற்றும் வணிகத் தலைவர்களாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விழா ’இந்திய வழிமுறையில் உலகை ஒன்றிணைப்பதில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது. ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருடன் மோகன் பகவத் கலந்துரையாடவுள்ளார்.
இந்த இயக்கத்தின் ஆலோசனைக் குழுவில் அஜய் பிரமல், தீபக் பரேக், நாதிர் கோத்ரெஜ், சசி தரூர் மற்றும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.
RSS Chief interacts with Gen Z and Gen Alpha generations!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.