கர்நாடகம்: மர்ம நபர்களால் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை
உடுப்பி மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி....
கர்நாடகத்தில் காங்கிரஸ் நிர்வாகியும், ஒப்பந்ததாரருமான டேவிட் டி சோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகியும், ஒப்பந்ததாரருமான டேவிட் டிசோசா வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் உடுப்பியில் உள்ள படுபித்ரி என்ற இடத்தில் நடந்துள்ளது.
இவர் முதரங்கடி கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகவும், மதுபானக் கூடம் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார் என போலீஸார் மேலும் கூறினர். இதுதவிர தற்கொலை வழக்கு ஒன்றில் சிறைத்தண்டனையும் அனுபவித்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
போலீஸார் கூறுகையில், வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டிசோசாவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அக்கம் பக்கத்தினரும், உள்ளூர் அதிகாரிகளும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பலியானார். தனிப்பட்ட தகராறு மற்றும் தொழில் விரோதம் என இரு கோணங்களிலும் இந்த அரசியல் கொலையின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் உடுப்பி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A local Congress leader and contractor was shot dead by unidentified assailants in this district on Friday afternoon, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.