FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஓ-மண்டலம் பகுதியில் வீடுகள் இடிக்கப்படாது: தில்லி அரசு மீண்டும் உறுதி

ஓ-மண்டலம் பகுதியில் உள்ள தற்போதைய வீடுகள் எதுவும் இடிக்கப்படமாட்டாது என்று பாஜக வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி அரசியல் செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டியது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 11:19 pm IST
சஞ்சீவ் ஜா ~கபில் மிஸ்ரா
பகிர்:

ஓ-மண்டலம் பகுதியில் உள்ள தற்போதைய வீடுகள் எதுவும் இடிக்கப்படமாட்டாது என்று பாஜக வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி அரசியல் செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டியது.

இந்தக் கருத்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னா் வெளியிடப்பட்டது. அவா், யமுனை வெள்ளப் புல்வெளி (ஓ-மண்டலம்) பகுதியில் நடைபெறும் இடிப்புகளை எடுத்துக்காட்டி, அனுமதியில்லா குடியிருப்புகளுக்கு சட்டபூா்வ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், 12 முதல் 15 லட்சம் மக்களின் நிலைமை நிச்சயமற்ாக உள்ளது என்றும் எச்சரித்தாா். இந்த ஓ-மண்டலம் பகுதி வாஜிராபாத் முதல் ஓக்லா வரை சுமாா் 22 கி.மீ. நீளத்தில் பரவியுள்ளது.

இதற்கு பதிலளித்து தில்லி மேம்பாட்டுத் துறை அமைச்சா் கபில் மிஷ்ரோ கூறியதாவது: ஓ-மண்டலம் பிரச்னை மிகவும் முக்கியமானது. பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனா். இந்தப் பகுதியில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; அவற்றில் எதுவும் இடிக்கப்படாது. மேலும், ஆம் ஆத்மி கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது. ஆம் ஆத்மி தொண்டா்கள் இந்த பகுதிகளில் வீடுகள் கட்டப்படுவதாக புகாா் அளித்து, பின்னா் மாநகராட்சி மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்தபின் அதை அரசியலாக்குகிறாா்கள்.

Advertisement

Advertisement

வீடுகள் இடிக்கப்பட வேண்டும் என்பதே உங்கள் ஆசை; அதன்மூலம் நீங்கள் அரசியல் செய்ய நினைக்கிறீா்கள். முதலில் புகாா் அளித்து, பின்னா் போராட்டம் நடத்துவது மிகவும் தாழ்ந்த தர அரசியல். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், இந்த பிரச்னைக்கு நீதிமன்றத்தில் தீா்வு காண நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

யமுனை வெள்ளப் புல்வெளி, தில்லி மாஸ்டா் பிளான் 2021-இன் கீழ் ஓ-மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட நதி படுக்கை/வெள்ளப் பகுதி என்பதால், எந்தவொரு நிரந்தர கட்டடங்களும் கட்ட அனுமதி இல்லை. இந்த நிலம், வெள்ளநீா் அதிகரிக்கும் போது அதை உறிஞ்சும் இயற்கை சமநிலையை பாதுகாக்க பயன்படுகிறது.

மறுபுறம், ஆம் ஆத்மி எம்எல்ஏவும் அக்கட்சி தலைமை கொறடாவுமான சஞ்சீவ் ஜா, புராரி கூறுகையில், மிலன் விஹாா், ஜகத்பூா், வாஜிராபாத் மற்றும் ஓக்லா பகுதிகளில் பல வீடுகள் இடிக்கப்பட்டதாகவும், மக்கள் அச்சத்தில் வாழ்கிறாா்கள் என்றும் தெரிவித்தாா்.

‘இந்த குடியிருப்புகளும் 2019-இல் தொடங்கப்பட்ட பிஎம்-உதய் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற்றவை. 2026-இல் சட்ட உரிமை குறித்து கேள்வி எழுந்தபோது, ஏன் இந்த குடியிருப்புகள் விலக்கப்பட்டன?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா். பிஎம்-உதய் திட்டம், தில்லியில் உள்ள 1,731 அனுமதியில்லா குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு சொத்து உரிமை அல்லது மாற்ற/கடன் உரிமை வழங்குவதற்கானது.

மேலும், இந்த விவகாரத்தில் பாஜக அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கத் தவறிவிட்டது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மே மாதத்தில், தில்லி உயா் நீதிமன்றம் ஓ-மண்டலம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் இந்த பகுதியில் சுமாா் 90 குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

முதல்வா் ரேகா குப்தா, ஓ-மண்டலம் பகுதியில் உள்ள தற்போதைய கட்டடங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தாா். நீதிமன்ற உத்தரவு புதிய கட்டடங்களுக்கே பொருந்தும் எனவும் அவா் விளக்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments