அதானி, கூகுள் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் இளைஞர்களின் தரவுகள்: ராகுல்
அதானி, கூகுள் நிறுவனங்களிடம் இளைஞர்களின் தரவுகள் ஒப்படைக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியது பற்றி...
அதானி, கூகுள் நிறுவனங்களிடம் இளைஞர்களின் தரவுகள் ஒப்படைக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (ஆக. 8) குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ் நகரத்தில் “இளைஞர்களின் குரல்” நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரையாற்றியதாவது:
இந்த நாட்டில் உங்களைப் போன்ற 40 கோடி ஆற்றல்மிக்க இளைஞர்கள் உள்ளனர். இதுவே நாட்டின் மிகப்பெரிய பலம். சீனா, அமெரிக்கா, ரஷியா பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் இந்திய இளைஞர்களின் ஆற்றலுடன் ஒப்பிடும்போது அவர்கள் அனைவரும் மங்கிவிடுகின்றனர்.
Advertisement
Advertisement
21 ஆம் நூற்றாண்டில், ஒரு நாட்டின் முன்னேற்றம் இரண்டு விஷயங்களைச் சார்ந்துள்ளது. அவை, இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், இவர்கள் உருவாக்கும் தரவுகள் ஆகியவை.
ஒவ்வொரு இந்தியரும் ஒரு ஜிகாபைட் தரவைப் பயன்படுத்துகிறார். புள்ளி விவரத்தைப் பார்க்கும்போது, 1000 இளைஞர்களில், வெறும் 12 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை கிடைக்கிறது. உங்களிடமிருந்து தரவுகள் பறிக்கப்படுகின்றன. ஜியோ, அதானி, ஃபேஸ்புக், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டு, நீங்கள் அதில் சிக்க வைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் விரும்பும் அளவுக்கு ரீல்களைப் பார்க்கவும், ஆசைப்படும் அளவுக்கு வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவும், இன்ஸ்டாகிராமில் உள்ளடக்கங்களை தேடவும், உருவாக்கவும் உங்களுக்குச் சொல்லப்படுகிறது.
இதுதான் 21 ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனம். அதன்பிறகு, பிளிங்கிட் அல்லது ஊபரில் வேலை செய்யவோ அல்லது உடல் உழைப்பு வேலை செய்யவோ உங்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நாட்டில் உங்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் கிடைக்காது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
Congress leader and Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi alleged on Saturday (Aug. 8) that the data of young people is being handed over to Adani and Google.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.