FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!

முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 4:00 pm IST
சூரியகாந்தி மலர்கள்
பகிர்:

நாட்டில் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனமான ஃபார்சூன் நிறுவனத்துக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கடுப்பாட்டு ஆணையம் அபராதம் விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து விற்பனை செய்ததற்காக, சமையல் எண்ணெய் நிறுவனமான ஏடபிள்யுஎல் அக்ரி பிசினஸ் லிமிடெட் மீது உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் (FSSAI) அபராதம் விதித்துள்ளது.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஏடபிள்யுஎல் அக்ரி பிசினஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் (Fortune) என்ற பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்து வருகிறது. கோவாவில் சேகரிக்கப்பட்ட மாதிரி ஒன்றில் வைட்டமின் டி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகக் குறைவாக இருந்தது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஏடபிள்யுஎல் அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக வெளியான உத்தரவு வெளியிட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தரமற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் அளவுகள் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குக் குறைவாக இருந்தன; இதனால், 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006'-ன் பிரிவு 3(1)(zx)-ன் கீழ் அப்பொருள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

ஆனால், இந்த உத்தரவில், எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அண்மைக் காலமாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

summary

Fine imposed on leading sunflower oil company!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments