FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

13 நாள்களாகியும் பதிலளிக்காத மோடி, அமித் ஷா: ராகுல் காந்தி

குடும்ப வறுமையைக் கடந்து போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவனின் தோல்வி அவனுடையது அல்ல, அரசாங்கத்தினுடையது என ராகுல் பதிவு...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:38 pm IST
ராகுல் காந்தி - பிடிஐ
பகிர்:

குடும்ப வறுமையால் கடன்பட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவனின் தோல்வி அவனுடையது அல்ல, அரசாங்கத்தினுடையது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி (ஆக. 9) தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் பிரச்னைகளின் ராகுல் காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.

வேலையின்மை, நீட் வினாத்தாள் கசிவு, அரசு போட்டித் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட மாணவர்களின் கோரிக்கைகளுக்காக 'மாணவர்களின் குரல்' என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

Advertisement

Advertisement

பிரயாக்ராஜில் நேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார். இதில், 1,000 பேரில் 12 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை கிடைப்பதாகவும் மீதமுள்ள இளைஞர்கள் முறைசாரா வேலைகளை செய்ய வேண்டிய நிலையே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மலிவான மொபைல் டேட்டாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஸ்கிரால் செய்யவைத்து திசை திருப்புவதிலேயே மத்திய அரசு குறியாக இருப்பதாகவும், கல்வி, வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறை குறித்து சிந்தித்துவிட கூடாது என நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஏழை மாணவர்கள் நிர்வாக சீர்கேடுகளால் தோல்வி அடைய நேரிடுவது குறித்து இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளதாவது:

"இனி எனக்கு வேறு வழியே இல்லை" - பிரயாக்ராஜில் நேற்று ஒரு மாணவர் என்னிடம் இதைக் கூறினார். பல ஆண்டுகால உழைப்பு, குடும்ப நிலத்தை விற்றது, பெற்றோரின் கடன் சுமை - இவையெல்லாம் இருந்தும், இறுதியில் கையில் மிஞ்சியது ஒன்றுமில்லை.

இந்தத் தோல்வி அவருடையது (மாணவர்) அல்ல; அவருடைய கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்த அந்த அரசாங்கத்தின் தோல்வி இது.

13 நாள்கள் ஆகிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வாய் கூட திறக்கவில்லை. மாணவர்களின் மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அமைச்சர்களை மன்னித்துவருகிறார் மோடி.

நாங்கள் பொறுப்புக்கூறலை நிறுத்துவிடுவோம் என ஒருபோதும் நினைக்காதீர்கள். தலைநகரின் வீதிகளில் குழந்தைகள் மீது தடியடிகளும் பெல்லட் குண்டுகளும் மழையெனப் பொழிந்தன - ஆனால் நீங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இன்றோ அல்லது நாளையோ, இந்தக் குற்றத்திற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

summary

failure of a student studying on an education loan is the government's failure: Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments