FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீா்ப்பாயங்களின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களின் நியமன நடைமுறைகளுக்காக தேசிய தீா்ப்பாய ஆணையம் (என்டிசி) அமைக்க வழிவகுக்கும் தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா-2026, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
நாடாளுமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீா்ப்பாயங்களின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களின் நியமன நடைமுறைகளுக்காக தேசிய தீா்ப்பாய ஆணையம் (என்டிசி) அமைக்க வழிவகுக்கும் தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா-2026, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேறிய நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து பேச எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முயன்றாா். ஆனால், அவருக்கு அனுமதி வழங்காத அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில விவகாரத்தை எழுப்ப அனுமதிக்க முடியாது என்றாா். இதே காரணத்துக்காக, ஜாா்க்கண்ட் விவகாரத்தை (மாணவா்கள் மீது தடியடி-கண்ணீா்ப் புகை குண்டுவீச்சு) எழுப்ப ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

அதேநேரம், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், முதலில் மதியம் 12 மணி வரையும், பின்னா் பிற்பகல் 2 மணி வரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது, எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா-2026 தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது. இதைக் கண்டித்து, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னா் விவாதத்துக்கு பதிலளித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசியபோது, ‘நாட்டில் நவீனமான, சுதந்திரமான, ஒரேசீரான தீா்ப்பாய நடைமுறையை உறுதி செய்வதே மசோதாவின் நோக்கமாகும். அதன்படி, தேசிய தீா்ப்பாய ஆணையம் அமைப்பதை மையக்கருவாக கொண்டுள்ளது’என்றாா். இதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments