FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசுத் தொகை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
உச்சநீதிமன்றம் - ANI
பகிர்:

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த கிரிதா் ராவ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்லும் வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஜொ்மனி தலைநா் பொ்லினில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், இந்தியா சாா்பில் எனது மகள் பூஜா, 25 மீட்டா் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, மத்திய அரசின் பரிசுக்கு, இதற்கான பதக்கச் சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன், விளையாட்டுக் குழு உறுப்பினா் மூலம் விண்ணப்பித்தோம். ஆனால், எனது மகளுக்கு பரிசுத்தொகை வழங்கவில்லை. இணையவழியில் விண்ணப்பித்த பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத் தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தவில்லை. எனவே, சா்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எனது மகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments