தங்கப் பதக்கம் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல... அருந்ததி சௌதரி நெகிழ்ச்சி!
அறிமுக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சௌதரி குறித்து...
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சௌதரி, “இந்த விருது எனது குடும்பத்துக்குச் சொந்தமானது” எனக் கூறியுள்ளார்.
இந்தியா சார்பில் முதல்முறையாக ஒரே பிரிவில் 7 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டுமே 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
இதில் 70 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி தனது முதல் காமன்வெல்த் தொடரிலேயே (23 வயது) தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து அருந்ததி சௌதரி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனது இதயம் நன்றியுணர்வினால் நிறைந்துள்ளது. கானம்வெல்த் போட்டி - 70 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம்.
எனது முதல் காமன்வெல்த் தொடரிலேயே இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றது கனவு நனவானதுபோல இருக்கிறது. இந்தப் பதக்கம் எனது மட்டுமே கிடையாது; இது எனது குடும்பத்திற்கும் சொந்தமானது. அவர்கள் எனது கனவு நனவாக அதிகமாக தியாகம் செய்துள்ளார்கள்.
என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், எனது அணியினர், வெற்றி தோல்வி என அனைத்து நேரங்களிலும் என்னுடன் நின்ற அனைவருக்கும் இந்தப் பதக்கம் சொந்தமானது.
வலி, தியாகம், காயம், கணக்கில்லாத மணி நேரங்களின் கடின உழைப்பு என நாள்கள் இருந்துள்ளன. இந்தியக் கொடியை உயர்த்தும் நேரத்தில் அனைத்து சவால்களும் மதிப்பு மிக்கதாக மாறியது. என்னை நம்பியதற்கு நன்றி இந்தியா. இந்தச் சீருடையை அணிந்து, தங்கப் பதக்கத்தை வீட்டுக்குக் கொண்டுவருவதில் மிகுந்த பெருமைக் கொள்கிறேன். இது தொடக்கம் மட்டுமே... ஜெய் ஹிந்த்! எனக் கூறியுள்ளார்.
This medal is not just mine; it belongs to my family Commonwealth Game Gold Medalist arundhati choudhary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.