ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு: மீராபாய் சானு
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நிலையில் ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நிலையில் ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனதுஅடுத்த இலக்கு என மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில், இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என மீராபாய் சானு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய போட்டிகள் வெகு தொலைவில் இல்லை. சீக்கிரத்தில் ஆசிய போட்டிகள் வரவுள்ளன. நேரம் குறைவாக உள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் வெல்வது மிகவும் கடினம். விரைவில் போட்டி தொடங்கவுள்ளதால் என்னுடைய பயிற்சியை நான் தொடங்கிவிட்டேன். ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
ஆசிய போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Mirabai Chanu has stated that winning a gold medal at the Asian Games is her next goal, following her gold medal win at the Glasgow Commonwealth Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.