FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மின்சாரம் பாய்ந்து பசு பலி: ஆத்திரத்தில் மின்மாற்றியை அடித்து நொறுக்கிய மக்கள்!

மின்மாற்றியை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் பற்றி..

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:26 pm IST
மின்மாற்றியை அடித்து நொறுக்கிய மக்கள் - X
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் மின்சாரம் பாய்ந்து பசு பலியானதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்மாற்றியை சரமாரியாகத் தாக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பசுமாடு கால்நடை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, இந்து வழிபாட்டில் புனித தெய்வமாகவும் போற்றப்படுகிறது. வட இந்தியர்கள் பசு வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பல குடும்பங்களுக்கு பசு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், மின்மாற்றியிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததால் பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியது.

Advertisement

Advertisement

மின் கட்டமைப்பினால் ஏற்பட்ட அலட்சியத்தின் காரணமாக, மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களைச் சரமாரியாக அடித்துச் சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நிலைமை மோசமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் திரண்டனர். சட்ட அமலாக்க அதிகாரிகள் மக்களை அமைதிப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சேதமடைந்த மின்மாற்றியைச் சரிசெய்து தருவதாகவும், பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு வழங்குவதாகவும் மின்சாரத் துறை நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

In an Indian village, a cow was killed by a powerful electric shock from a transformer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments