ஜார்க்கண்டில் 20-வது நாளாக மாணவர்கள் போராட்டம்! 600 பேர் மீது வழக்குப் பதிவு!
ஜார்க்கண்டில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...
ஜார்க்கண்டில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 600 மாணவர்களுக்கு எதிராக மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
14-வது ஒருங்கிணைந்த ஜார்க்கண்ட் குடிமைப் பணித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டித்து, அம்மாநில மாணவர்கள் அமைப்பினர் நடத்தும் போராட்டம் வியாழக்கிழமை 20-வது நாளை எட்டியுள்ளது.
தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மாநில அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
14-வது ஒருங்கிணைந்த ஜார்க்கண்ட் குடிமைப் பணித் தேர்வை ரத்து வேண்டும், சிபிஐ அல்லது வெளிமாநில ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று திட்டவட்டமாக மாணவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உள்பட மொத்தம் 600 பேருக்கு எதிராக ராஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக, போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையை முற்றுகையிட பேரணியாக சென்ற மாணவர்களை தடுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதில், பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Student protests in Jharkhand enter 20th day! Cases registered against 600 people!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.